திருச்சியில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொறியாளர்கள் ரோபோக்களை வடிவமைத்துள்ளனர்.
பிராபலர் எனப்படும் தனியார் நிறுவனம் ‘ஷாபி மெடி’ எனும் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது. முன்னதாக இந்த ரோபோக்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமானதையடுத்து, தற்போது இந்த ரோபோக்கள் கொரோனா தொற்று பாதிப்புள்ளவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் கொண்டு செல்ல ஏதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை - சுகாதாரத்துறை
இது குறித்து பொறியாளர் குரு கூறும்போது “ இந்த ரோபோக்களின் மூலம் மனிதர்கள் நோயாளிகளை நேரடியாக தொடர்பு கொள்வது தடுக்கப்படும். ஏன் என்றால் நோயாளிகளிடம் இருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு, இந்த ரோபோக்களை இயக்க முடியும். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு தேவையான காய்கறிகள் மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ கிட்டத்தட்ட இருபது கிலோ வரை பொருட்களை சுமந்து செல்லும்.
“ ஊரடங்கிற்காக என்னை மன்னித்து விடுங்கள்; வேறு வழியில்லை”- பிரதமர் மோடி
இதனால் காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு சென்று தேவையான பொருட்களை வழங்கும் நிலையை நம்மால் தவிர்க்க முடியும். இந்த ரோபோக்களில் நோயாளியின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்து வைக்கவும் முடியும்” என்றார்
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!