நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கில் அவசரப் பயணமா ? காவல்துறையை தொடர்புக்கொள்ளலாம் !
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் மொத்தம் மூன்று பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் சீராக இருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சமூகவலைதளத்தில் அவதூறு: இன்போசிஸ் ஊழியர் கைது !
சேலத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உள்ளது. அதில் ஒருவர் கடந்த 25ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, திருப்பூர், தஞ்சை, அரியலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!