[X] Close >

“கொரோனா சிகிச்சைக்கு என் 30 பங்களாவைத் தருகிறேன்” - வியக்க வைத்த தொழிலதிபர்

Bengal-Industrialist-Offers-Luxury-Bungalows-To-Government-To-Fight-Covid-19

தொழிலதிபர் ஒருவர் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ மையமாக மாற்றத் தனது 30 பங்களாக்களை அரசுக்கு வழங்க முன்வந்துள்ளார்.


Advertisement

இந்தியாவில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 870க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 149 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்ப் பாதிப்பிலிருந்து குணமடைந்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

Candid chat with Ambuja-Neotia group chairman Harshvardhan Neotia ...

தமிழகத்தில் கொரோனா வைர‌‌ஸால் பாதிக்கப்பட்டோரி‌ன் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்தமாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். சேலத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சொல்லப் போனால் இதுவரை உலகம் இந்த மாதிரியான நெருக்கடியைச் சந்தித்ததில்லை. நம்மிடம் இருக்கும் மருத்துவமனை வசதிகள் யாவும் ஒரே நேரத்தில் இப்படி ஆயிரக் கணக்கான மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவதைச் சமாளிக்கக் கூடிய அளவில் இல்லை. மருத்துவர்களின் சேவை இந்த நேரத்தில் மகத்தானதாக இருந்தாலும் பற்றாக்குறை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் சிகிச்சைக்கான படுக்கைகளை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் அந்தப் படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ஆகவே இட நெருக்கடிகள் உருவாகும் நிலை வரலாம் என அச்சம் நிலவுகிறது. ஆகவே அரசு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவையை எதிர்பார்க்கிறது. மேலும் தன்னார்வலர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். மனம் உகந்து கொடை அளிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள்.


Advertisement

Not in quarantine,' clarifies Kamal Haasan, Chennai Corp removes ...

இந்நிலையில்தான் நடிகர் பார்த்திபன் கே.கே நகரில் உள்ள அவரது இரண்டு வீடுகளை மருத்துவ பயன்பாட்டிற்காகத் தருவதாக அறிவித்தார். மேலும் தன்னைப் போல இரண்டு வீடு உள்ளவர்கள் அரசுக்கு தந்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்பகுதியில் உள்ள நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்க இந்த உதவி ஏதுவானதாக இருக்கும். இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தை ஏழை எளிய மக்களின் கொரோனா சிகிச்சைக்காக வழங்க முன்வந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேற்கொண்டு பலரும் இதைப் போல உதவ முடிவெடுத்து அறிவித்து வருகின்றனர்.

BCCI To Propose Constitutional Amendment To Prolong Sourav ...

இந்தக் கொடையை எல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தன் நியோட்டியா என்பவர் தனக்குச் சொந்தமாக உள்ள 30 சொகுசு பங்களாக்களை மொரோனா சிகிச்சை மையமாக மாற்றி, மருத்துவமனையாகச் செயல்பட மாநில அரசுக்குத் தற்காலிகமாக வழங்கியுள்ளார். இவர் கொடுத்த யோசனையை அம்மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து நியோட்டியா, "ஒரு நெருக்கடி உள்ளது. இந்த நிலைமையைக் கடந்து செல்வதற்கான பயனுள்ள ஒரு உள் கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் எந்தவொரு வணிக அம்சங்களையும் சிந்திக்கவில்லை, எங்களால் முடிந்த அளவுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

How Karthik Subbaraj outsmarted Parthiban - The Hindu

மேலும், "நாங்கள் இதன் பயன்பாட்டிற்காக எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. இது அரசாங்கத்திடம் உள்ளது. இதனை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் வசதிக்காக அல்லது மருத்துவ ஊழியர்களின் குடியிருப்பாகக்கூடப் பயன்படுத்தப்படலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் இந்தளவுக்கு வருமானம் பார்க்காமல் உதவ முன்வந்துள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கொல்கத்தாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் முன்னணி தொழிலதிபர் ஹர்ஷவர்தனுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரைப் போலவே கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி, தனது பங்களிப்பாக வீடுகளின்றி, சாலையோரத்தில் வசித்து வரும் ஏழை மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசி மூட்டைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இப்பணியை விரைவில் ஓர் தனியார் அமைப்பிடம் கங்குலி ஒப்படைப்பார் என்றும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த மாதிரியான பேரிடர் காலங்களில் பெரும் செல்வந்தர்கள் மனிதாபிமான அடிப்படையில் எடுக்கும் முடிவுகள் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close