144 தடை உத்தரவு : மதுரையில் உணவின்றி முதியவர் உயிரிழந்த பரிதாபம்..!

144 தடை உத்தரவு : மதுரையில் உணவின்றி முதியவர் உயிரிழந்த பரிதாபம்..!
144 தடை உத்தரவு : மதுரையில் உணவின்றி முதியவர் உயிரிழந்த பரிதாபம்..!

நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், உசிலம்பட்டியில் உணவின்றி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. இதனால் சாலையோரத்தில் பல்வேறு மனநோயாளிகள், ஆதரவற்றவர்களாக சுற்றித்திரியும் நபர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் ஆங்காங்கே உணவுகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோஸ்ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. ஆதரவற்ற முதியவரான இவர் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோவில் அருகே யாராவது உணவு வழங்கினால் அதை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் பாண்டி இரு நாட்களாக சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த முதியவருக்கு அப்பகுதியினர் உணவு கொடுக்க எழுப்பியுள்ளனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலிசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இது போன்ற சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுகளையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com