இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு ஆளான 101 வயது முதியவர் முழுமையாக குணமடைந்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 597,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,363 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,365 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளான 101 வயது முதியவர் முழுமையாக குணமடைந்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இத்தாலியின் கடலோர பகுதியான ரிமினியை சேர்ந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர், ஓஸ்பெடேல் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர் சிகிச்சையால் தற்போது அந்த முதியவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
குணமடைந்த அவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர். இத்தாலியில் கொரோனா வைரஸால் இதுவரை 8 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட இந்த 101 வயது முதியவர் மற்றவர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'