தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 35 பேராக இருந்த கொரோனா பாதிப்பு 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Advertisement

image

சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

இதில் சென்னையச் சேர்ந்த மூதாட்டிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தோனேசிய நபருடன் தொடர்பில் இருந்த 61 வயது முதியவருக்கு சேலம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதரத் துறை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement