[X] Close

‘பண்ட் முதல் தவான் வரை’ - ஊரடங்கில் கிரிக்கெட் பிரபலங்களின் சேட்டைகள்..!

Subscribe
BCCI-shares-video-of-Rishabh-Pant-s-indoor-workout-session-amid-coronavirus-lockdown

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினரும் விளையாட்டுப் பிரபலங்களும் வீட்டில் இருந்தவாரு தாங்கள் செய்யும் செயல்களை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்குமாறு வீடியோவை வெளியிட்டார். அதேபோல சச்சின் டெண்டுல்கரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டார்.


Advertisement

image

கொரோனா பாதிப்புக்கு தோனி ஒரு லட்சம் மட்டுமே கொடுத்தாரா?: ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் 


Advertisement

இப்போதுள்ள தலைமுறையினருக்கும் முந்தைய தலைமுறையினருக்கும் 21 நாள்கள் ஊரடங்கை இதுவரை கண்டதில்லை.எப்போதும் பரபரப்பான வாழ்க்கைக்குப் பழகிப் போன இந்திய மக்கள் 21 நாள்கள் எப்படி வீட்டில் இருப்பது என்று பெரும் குழப்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு உத்தரவை எப்படிச் சமாளிப்பது என்று மன நல மருத்துவர்கள் பல்வேறு யோசனைகளைச் சொல்லி வருகின்றனர். இந்தியாவுக்கு சமூக விலகியிருத்தல் எவ்வளவு முக்கியம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தெளிவாகச் சொல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது.

image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானோர் எண்ணிக்கை 743ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்த பாதிப்புகள் தெரிந்தும் நம்முடைய மக்களுக்குப் பொழுதுபோக்கு அவசியமாகிறது. இதனால் தொலைக்காட்சிகளில் புதியப் படங்கள் போடப்படுகிறது. நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஆப்கள் இலவசமாகப் படங்களைப் பார்க்கும் வசதியைச் செய்துள்ளது. இந்நிலையில் திரைப் பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நம்மைப் போலவே 21 நாள்கள் வீட்டில்தான் இருந்தாக வேண்டும். இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக்கில் படு ஆக்டிவாக இருக்கிறார்கள்.


Advertisement

image

பிரபலங்கள் தங்களுடைய ரசிகர்களையும் வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும், அதே நேரத்தில் பொழுதும் போக வேண்டும் என்பதால் சமூக வலைத்தளங்களில் நேரலையாக உரையாடுவது, 21 நாள்களில் சிக்ஸ் பேக் கொண்டு வருவதற்கான உடற்பயிற்சி டிப்ஸ் ஆகியவற்றை வாரி வழங்கி வருகின்றனர். சிலர், ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்காகவும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 21 நாள் பரிதாபங்கள் என்ற ரேஞ்சில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் ஷிகர் தவான் வீட்டில் துணிகளைத் துவைப்பதும், தலையில் அடித்துக்கொண்டே கழிவறையைச் சுத்தம் செய்கிறார், அவரது மனைவி ரிலாக்ஸ் ஆக தலை முடியை வாரிக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.50 லட்சம் நிதி வழங்கினார் சச்சின் ! 

ஆனால் இன்று பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பன்ட் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதற்கு "வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்" எனத் தலைப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில், தண்டால் எடுப்பது, ட்ரெண்ட் மில் போன்ற உடற்பயிற்சிகளை செய்கிறார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close