JUST IN

Advertisement

கேரளாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு : முதல்வர் பினராயி விஜயன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “34 பேர் கசர்காட் பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கன்னூரில் இருந்தும், திரிச்சூர், கொல்லம் மற்றும் கோழிக்கோட்டில் இருந்து தலா ஒருவரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 1,01,402 பேர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாகவும், 601 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

image

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்காக 716 தங்கும் விடுதிகளில் 15,333 அறைகள் மற்றும் மருத்துவமனைகளில் 5,607 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுதவிர மக்கள் பசியை போக்குவதற்கு 861 கிராமங்களில் 941 சமூக உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

image


Advertisement

கேரளாவைத் தொடர்ந்து தெலங்கானாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உறுதி செய்துள்ளார்.

கொரோனாவை தடுக்க மக்கள் நிதி தரலாம்: தமிழக அரசு வேண்டுகோள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement