“வெளியே செல்வதை நிறுத்துங்கள் நாம் விடுமுறையில் இல்லை” - சச்சின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசின் உத்தரவை ஏற்று மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோரியுள்ளார்.


Advertisement

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இதுவரை உலக அளவில் 4,86,702 பேரையும், இந்திய அளவில் 649 பேரையும் பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பிலிருந்தும், காவல்துறை தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

image


Advertisement

நீங்கள் வெளியே சென்றால், கொரோனா வைரஸ் உங்கள் வீட்டிற்கு உள்ளே வரும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இருந்தாலும் 135 கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் இந்தியாவில் ஊரடங்கு என்பது முழுமையாக நிறைவேறாத ஒன்றாகவே திகழ்வதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மக்கள் ஆங்காங்கே வீடுகளை விட்டு வெளியே செல்வதாகவும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கை மீறியதாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

image

இதற்கிடையே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள சச்சின் டெண்டுல்கர், நமது அரசின் சுகாதாரத்துறை வல்லுநர்கள் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், துணிந்து வெளியே செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நிறைய மக்கள் வெளியே செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தானும், தனது குடுமபத்தினரும் வீட்டில் இருப்பதாகவும், அடுத்த 21 நாட்களுக்கு வெளியே அடியெடுத்து வைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், அனைவரும் தன்னை போன்றே இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வெளியே செல்ல இது விடுமுறை அல்ல எனவும் கூறியுள்ளார்.


Advertisement

கொரோனாவுக்கான புதிய அறிகுறிகள் என்னென்ன ?

loading...

Advertisement

Advertisement

Advertisement