டெல்லியில் வண்டியை தள்ளிவிட்டு காய்கறிகளை சேதப்படுத்திய காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லியின் பட்டேல் நகர் பகுதியில் தள்ளு வண்டிகளில் காய்கறிகளை ஒரு வியாபாரி
வைத்திருந்தார். ஊரடங்கிலிருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வந்த காவலர் ஒருவர் எந்தவித காரணமும் இல்லாமல் வண்டிகளை தள்ளிவிட்டு காய்கறிகளை வீணடித்தார்.
வீட்டுக்கு போக விரும்பிய மாணவி - மாநிலம் கடந்து பத்திரமாக சேர்த்த போலீஸ்
இந்தக் காட்சி பரவத் தொடங்கியதையடுத்து, பல்வேறு தரப்பினரும் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஊரடங்கின் நோக்கம் காவல்துறையினருக்கே தெரியவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து காவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது !
குறிப்பாக ஊரடங்கை மீறி வெளியில் வருவோரை தாக்கக் கூடாது, வழக்கு மட்டுமே தொடரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டினரையும் சேர்த்து நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்