JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு.. ஏழைகளுக்காக நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகை திட்டங்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்புகள்... 

80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் கூடுதலாக அடுத்த மூன்று மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 வழங்கப்படும் நிலையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படும். இதனால் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவர்.

image

ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்படும்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

தொழிலாளர்கள் பி.எப் நிதியிலிருந்து 75 சதவீத நிதி அல்லது மூன்று மாத ஊதியம் இதில் எது குறைவோ அதனை முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement: