JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கொரோனா ஏன் ஆபத்தானது..? சந்தேகங்களும்... விளக்கங்களும்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை 606 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதனைதொடர்ந்து மத்திய அரசும், மாநில அரசுகளும் கொரோனாவை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் சிலருக்கு இன்னும் கொரோனா குறித்து எந்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் கொரோனா ஏன் ஆபத்தானது, அது எப்படி பரவுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தக் கட்டுரை.

image


1.கொரோனா வைரஸின் அறிகுறிகள் ?

காய்ச்சல், அசதி, வறட்டு இருமல், உடல்வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி வயிற்றுப்போக்கு.

2.கொரோனா எப்படி பரவுகிறது?

தும்மல் இருமலின்போது தெறிக்கும் நீர் திவலைகளின் வழியே கொரோனா வைரஸ் மற்றவர்களை தொற்றிக் கொள்ளும். கிருமிகள் உள்ள இடத்தை தொட்டுவிட்டு, முகம், கண், மூக்கு, வாயை தொடும்போது வைரஸ் தொற்று ஏற்படும். 

ஏப்ரல் 14 வரை சுங்கக் கட்டணம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு

image

3.காற்றின் மூலம் கொரோனா பரவுமா?

இருமல், தும்மலின் மூலம் கொரோனா வைரஸ் பரவும்.காற்றின் மூலம் பரவாது.

4. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா?

சளி, இருமல் உள்ளவர்கள், மருத்துவத்துறையினர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மற்றவர்கள் பாதுகாப்பு கருதி அணியலாம்.

image

ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..! 

5.கொரோனா வந்தாலே இறப்பு நிச்சயமா?

கொரோனா வந்தவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையிலேயே சரியாகி விடுவார்கள். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பாதிப்புகள் கடுமையாக இருக்கும். ஆகவே அவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Advertisement: