JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

“அரசு அனுமதித்தால் எனது வீட்டை மருத்துவமனையாக்குவேன்” - கமல்ஹாசன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசு அனுமதி அளித்தால் தனது வீட்டை தற்காலிகமாக மருத்துவமனையாக்கப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு பயத்தால் மக்கள் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருக்கின்றனர்.

image

அதேசமயம் அவசியமில்லாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டால் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

image

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.

எந்நேரமும் பிரசவம் நிகழக்கூடும்: கண்காணிப்பில் கர்ப்பிணிகள், தயார் நிலையில் 108 

Advertisement: