எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழக்கூடும் என்ற நிலையில் உள்ள 1482 கர்ப்பிணிகள் தொடர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,21,413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழக்கூடும் என்ற நிலையில் உள்ள 1482 கர்ப்பிணிகள் தொடர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள்,
கர்ப்பிணிகளை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. பிரசவ வலி ஏற்படும் பெண்களை கொரோனா வார்டு அமைந்துள்ள மருத்துவமனைகளில் சேர்க்காமல் நகர் நல மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இதர மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்
சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கம்
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?