இணையவாசிகளுக்கு ஏதுவாக வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கின்றன. கொரோனா தீவிர தொற்று நோய் என்பதால் பொதுமக்கள் பொது
இடங்களில் கூட வேண்டாமென இந்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக 144 உத்தரவையும் அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து
பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வீட்டு வேலைகள், சமையல் போன்ற வேலைகளை செய்தாலும் பொதுமக்கள் டிவி, இணையத்தில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள், வீட்டுக்குள்ளேயே கிடப்பவர்களுக்கு இணையம் பெரிய பொழுதுபோக்காக உள்ளது. பிடித்த படங்களை பார்ப்பது, தொடர்களை பார்ப்பது என இணையவாசிகள் தங்கள் நேரங்களை செலவழிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஏதுவாக சில நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை குறைப்பதாக நெட்ஃபிளிக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் இணையவாசிகள் இணைய செலவைக் குறைக்க முடியும். இது குறித்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் தரத்தை தற்காலிகமாக குறைக்கிறோம், இது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.
தடை உத்தரவை மீறும் வாகன ஓட்டிகள் : கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை விடுத்த போலீஸ் எஸ்.ஐ.
Loading More post
“எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம்” - கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டி
தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?
கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை கண்காணிப்பு - தேர்தல் அதிகாரி
கமல்ஹாசனின் 3-வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை - வைகோ
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை