தேனி: காட்டுத் தீயில் சிக்கி குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனியில் காட்டுத் தீயில் சிக்கி 1 குழந்தை மற்றும் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு மலைச்சாலையும் மூடப்பட்டது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வர முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்

image


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக அதிகரிப்பு

இந்நிலையில் தேனி மாவட்டம் போடி இராசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சுமார் 9 பேர் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான அரளியூத்து வழியாக இராசிங்கபுரம் வருவதற்காக மலைப்பாதையின் வாயிலாக நடந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயில் சிக்கிய இவர்களில் கீர்த்திகா (3 வயது) என்ற பெண் குழந்தையும், விஜயமணி(45) என்ற பெண்மணியும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

image 


Advertisement

ரஷ்யாவின் குரில் தீவுகளில் நிலநடுக்கம்!!
இதனையடுத்து தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்ற தீயணப்புத் துறையினர் மற்றவர்களை மீட்டனர். ஆனால் மலைப்பகுதியில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வரும் வழியில் மஞ்சு(34), மகேஸ்(34) ஆகிய இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். இதன் மூலம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மீதமுள்ள 5 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement