JUST IN

Advertisement

‘கணவனிடம் இருந்து மனைவிக்கு, மகனிடம் இருந்து தாய்க்கு பரவியிருக்கிறது’ விஜயபாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நோய் தொற்று இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தாமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்தையும் தெரியப்படுத்தி இருக்கிறோம். 18 நோயாளிகளையும் ஆய்வு செய்து பார்க்கின்றபோது, பாதித்த கணவனிடம் இருந்து மனைவிக்கும், மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியிருக்கிறது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி எதுவும் இல்லை. பின்னர் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. பின்னர், அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

கொரோனாவுக்காக நாளை 100 புதிய ஆம்புலன்ஸ்கள் நாளை அனுப்பப்படுகிறது. அழுத்தமான வலியுறுத்தல் என்பது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது வெளிநாட்டு பயணம் செய்து வந்தவர்கள் கட்டாயாமாக செய்ய வேண்டிய விஷயம். 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் நமக்காகதான். எவ்வுளவு கண்காணிப்பு நடவடிக்கைகள் செய்தாலும் அதனை தாண்டியும் வெளிநாடு சென்றவர்கள் வெளியே சென்று வருகின்றனர். தமிழகம் இன்றைக்கு செய்ய வேண்டிய  விஷயம் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வதுதான்” என்றார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement