‘எனது நகரத்தை இப்படி பார்ப்பேன் என நினைத்ததேயில்லை’: சவுரவ் கங்குலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்குவங்க மாநிலம் ஒட்டு மொத்தமாக முடங்கிப் போய் இருப்பது குறித்து சவுரவ் கங்குலி அவரது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை 3,34,000 பேருக்கும் மேற்பட்டோர் உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகளவில் 17,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் அச்சம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், உலக அளவில் 67 நாட்களில் ஒரு லட்சம் பேருக்குப் பரவிய கொரோனா வைரஸ் அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவியுள்ளது. அதன் பின்னர் அடுத்த 4 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்குப் பரவி 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை சுமார் 15 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர்.

image


Advertisement

இந்தியாவைப் பொறுத்தவரை 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 446 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 22 பேர் புதிதாகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ இன்ஸ்டாகிராம் கொண்டாட்ட போட்டோ : தோனி மிஸ்ஸிங்..!

இந்நிலையில், கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணியிலிருந்து 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே, திரையரங்கங்கள், மால்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடை உத்தரவும் வெளியாகியுள்ளதால் ஒட்டுமொத்தமாக மாநிலமே முடங்கிப் போய் உள்ளது. மேற்குவங்கத்தில் தடை உத்தரவை மீறி வெளியே நடமாடிய பொதுமக்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.


Advertisement

image

இந்நிலையில் ஒட்டுமொத்த மேற்குவங்க மாநிலம் முடங்கிப் போய் உள்ளது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நகரத்தை இதுபோன்று பார்ப்பேன் என்று நினைத்துகூட பார்த்ததில்லை; பாதுகாப்பாக இருங்கள். இது விரைவில் மாறும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், ‘அனைவருக்கும் என் அன்பும் பாசமும்” என்றும் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement