தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லண்டனிலிருந்து சென்னை திரும்பிய இருவருக்கும், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. லண்டனில் இருந்து திரும்பியவர்களில் ஒருவர் புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர். இவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் திருப்பூரைச் சேர்ந்தவர், இவர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
#coronaupdate: 3 new #COVID19 positive cases in TN. 25 Y M Purasaivakkam, London return at #RGGH. 48 Y M Tiruppur,London return at #ESI Hosp. 54 Y M,MDU - Annanagar at #Rajaji Hosp. All 3 in isolation & treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar — Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 23, 2020
மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 12,519 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
#LIVE | தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா; மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
https://t.co/c02ppsFY7G— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) March 23, 2020Advertisement
Loading More post
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொடுத்த பொறுப்பை அறிந்து விளையாடும் படைவீரன் வாஷிங்டன் சுந்தர்!
இங்கிலாந்தில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு
மதுரை: திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் வசூல் செய்த மணமக்கள்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!