கொரோனாவால் இத்தாலியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
கொரோனாவால் மொத்தமாக முகம் மாறி போயிருக்கிறது இத்தாலி. சீனாவின் வுகான் நகரம்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் பகுதி. இன்றைய தேதி வரை சீனாவில் கொரோனாவுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். அந்நாட்டில் இருந்து பரவிய கொரோனா இத்தாலியை படுமோசமான மரண குழியில் தள்ளிவிட்டிருக்கிறது
மக்கள் தொகையில் 70 சதவிகிதம் வரை முதியவர்கள் கொண்ட நாடான இத்தாலியில், இறப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது. உலகை ஆட்சி செய்யப் போவதாக கோட்டை கட்டிய முசோலினியின் கோட்டையான இத்தாலி மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது. கொரோனாவால் எங்கு பார்த்தாலும் கொத்து கொத்தாக மாண்டு போனவர்கள், அவர்களுக்காக கண்ணீர் விடும் உறவினர்களின் மரண ஓலங்கள் என இத்தாலி முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
கைகளை தூய்மையாக வைத்திருங்கள், சுற்றுலா செல்வதை தவிருங்கள், சமூக விலகலை கடைபிடியுங்கள் என்ற அறிவுரைகளை வெறும் நகைச்சுவையாக கருதி காற்றில் பறக்க விட்டதால், இந்த அளவுக்கு பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறது இத்தாலி. உயிரிழப்பு எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
இத்தனைக்கும் இத்தாலி மருத்துவ துறையில் பல்வேறு வசதிகளை கொண்ட நாடு. கொரோனாவால் அதிகம் பாதித்திருக்கும் லோம்பார்டி பகுதி, சீனாவுடன் வர்த்தக அளவில் நெருங்கிய தொடர்பு கொண்டது. சீனாவில் இருந்து நேரடியாக வந்தவர்களால் கொரோனா பரவி இருந்தாலும், அதை தடுக்கத் தவறியது அந்நாட்டு குடிமக்களின் அஜாக்கிரதையான குணம்தான் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
லோம்பார்டியில் கடந்த 18-ஆம் தேதி வெறும் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வந்த நபர் ஒருவருக்கு அடுத்த இரு தினங்களில் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. அவசரமாக மருத்துவ பரிசோதனை செய்தபோதுதான் அவருக்கு கொரோனா தொற்று இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இடைப்பட்ட இரு தினங்களில் அந்த நபர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து, நான்கைந்து விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். அந்த விளையாட்டை காண வந்த பார்வையாளர்களிடம் கை குலுக்கி நலம் விசாரித்திருக்கிறார்.
இப்படி கொரோனா பற்றி எந்த அச்சமும் இல்லாமல், அந்த நபர் நடந்து கொண்டதும், சாதாரண காய்ச்சல்தான் என சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த மருத்துவர்களும் தான் இத்தாலியின் இன்றைய மோசமான நிலைக்கு காரணம்.
வரும் முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழி கொரோனா விவகாரத்தில் உலகம் முழுவதும் இன்று நிதர்சனமாகி இருக்கிறது. கொரோனாவை அஜாக்கிரதையாக கையாண்ட இத்தாலியிடம் இருந்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கையை கற்றுக் கொள்ள வேண்டும்.
கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல்
Loading More post
“கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை!” - இந்து சமய அறநிலையத்துறை
கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!