JUST IN

ஆண்களை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ்? - புள்ளிவிவரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்றுக்கு அதிகளவு ஆண்களே ஆளாவதாக சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

image


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,071 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாவர்களின் எண்ணிக்கை 308,720 ஆக அதிகரித்துள்ளது. இதில் சீனாவில் மட்டும் 81,054 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,261 ஆக அதிகரித்துள்ளது.

“தனிமையில் இருக்கிறேன்” - ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ்

image


இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு அதிகளவு ஆண்களே ஆளாவதாக சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51.4 சதவீதம் பேர் ஆண்கள். 48.6 சதவீதம் பேர் பெண்கள். அதே வேளையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கையில் 63.8 சதவீதம் பேர் ஆண்கள். 36.2 சதவிகிதம் பெண்கள்.
இந்தப் புள்ளி விவரம் மூலம், கொரோனா தொற்றானது ஆண்களுக்கே அதிகமாகப் பரவுவதாக தெரியவந்துள்ளது.

 

Advertisement: