JUST IN

“4 நாட்களாக தனிமையில் இருக்கிறான் என் மகன்” - நடிகை சுஹாசினி வீடியோ பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


லண்டனில் இருந்து வந்த தனது மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை சுஹாசினி ஒரு விழிப்புணர்வு வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.


மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக‌ மாறியுள்ளது கொரோனா. இந்த வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் ‌உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்றில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸால் 160 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையா‌க நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.‌ இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பி‌ரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

image

இந்நிலையில் நடிகை சுஹாசினி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகன் லண்டனில் இருந்து வந்துள்ளதாகவும் அதனால் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் விழிப்புணர்வு சார்ந்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “கண்ணாடிக்கு வெளியிலிருந்து பத்து அடி தள்ளி நின்று என்னுடைய மகன் நந்தனிடம் பேசிக்கிட்டு இருக்கேன். அதுக்கு என்ன காரணம் என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரியும். அவர் லண்டனில் இருந்து கடந்த 18 ஆம் தேதி சென்னைக்கு வந்தாரு. வந்ததில் இருந்து அவர் இந்த அறைக்குள்ள தான் இருக்காரு” என்று கூறிய அவர் தன் மகனை எத்தனை நாள் தனிமையில் இருக்கே? நந்தன் எனக் கேட்கிறார்.

image

அதற்கு அவர், “நான் கடந்த புதன் கிழமை வந்தேன். இன்றைக்கு ஐந்தாவது நாளாக வீட்டில் தனிமையில்தான் இருக்கிறேன். கொஞ்சம் போர்தான் அடிக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? நாம் அனைவரும் அதை செய்துதான் ஆக வேண்டும். இது ரொம்ப சின்ன விஷயம். வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு 14 நாள் நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். எனக்கு சாப்பாடு கூட அறைக்கு வெளியிலேயே வைத்து விடுகிறார்கள். நான் அதை கைகளைக் கழுவிக் கொண்டு பின் அதை எடுத்து சாப்பிடுகிறேன். அவர்களும் நான் சாப்பிட்டு வைத்த பொருட்களை கிருமி நாசினி போட்டு கழுவிய பிறகே தொடுகிறார்கள்” என்று கூறியுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Advertisement: