இரண்டு மகள்களை கொன்ற கொடூரன் - மனைவியிடம் நடித்து மாட்டிக்கொண்ட சம்பவம்

Man-arrested-for-killing-two-children-in-Bengaluru

பெங்களூரில் தனது இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டு எதுவும் தெரியாததுபோல மனைவியிடம் நடித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

கேரளாவைச் சேர்ந்த ஜெடின் (34) என்ற நபர் தமிழகத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மி என்ற பெண்ணை 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலித்த காலத்தில் தான் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி என லக்‌ஷ்மியிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர். இந்த உண்மை திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்னர் தான் லக்‌ஷ்மிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு தன் படிப்பிற்கு ஏற்ப சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலைக்குச் சென்றிருக்கிறார். அதேசமயம் தனது மனைவிக்குத் தான் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் என்ற உண்மை தெரிந்துவிட்டதே என ஜெடின் மன அதிருப்தியில் இருந்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில் ஒரு கொடூர சம்பவத்தை ஜெடின் செய்திருக்கிறார். தனது மனைவி வேலைக்குச் சென்ற சமயத்தில் தனது 5 வயது மகள் மற்றும் ஒன்றவரை வயது மகள் ஆகிய இருவரையும் படுக்கையில் மூச்சுத்திணறடித்து அவர் கொன்றிருக்கிறார். கொலை செய்வதற்கு முன்பு இருவரையும் குளிப்பாட்டி அவர் உணவு ஊட்டியிருக்கிறார் என்பது சோகத்தின் உச்சம். குழந்தைகள் இறந்த பின்னர் படுக்கையில் உறங்குவது போலப் படுக்க வைத்துவிட்டு இருந்துள்ளார். மனைவி வேலையிலிருந்து திரும்பியதும் ஒன்று தெரியாதது போல இருந்திருக்கிறார்.

image

குழந்தைகள் குறித்து லக்‌ஷ்மி கேட்டபோது, தூங்கிக்கொண்டிருப்பதாக ஜெடின் கூறியிருக்கிறார். பின்னர் மனைவிக்கு இரவு உணவு சமைப்பதற்கு உதவி செய்திருக்கிறார். இரவு உணவு சாப்பிடுவதற்காக லக்‌ஷ்மி குழந்தைகளை எழுப்ப முயன்ற போது, இறந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே ஜெடினிடம் லக்‌ஷ்மி கேட்க, அவர் எதுவும் தெரியாததுபோல நடித்துள்ளார். பின்னர் காவல்துறையினருக்கு லக்‌ஷ்மி தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜெடினிடம் கிடிக்குப்பிடி விசாரணை செய்ததில் உண்மைகள் அனைத்து வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளன.


Advertisement

கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement