‘மதுபான ஆலைகளில் சானிடைசர்ஸ் தயாரியுங்கள்’: மத்திய அரசு அறிவுறுத்தல்

Govt-asks-liquor-makers-to-manufacture-hand-sanitisers

மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை சானிடைசர்ஸ் தயாரிக்கும் ஆலைகளாக மாற்ற மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்தியாவையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கைகளைச் சுத்தம் செய்யும் சானிடைசர்ஸ் மற்றும் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பல இடங்களில் சானிடைசர்ஸ் மற்றும் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், பதுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சில இடங்களில் போலியான சானிடைசர்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளன.

image


Advertisement

அதேசமயம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவில் தீவிரமெடுத்துள்ள நிலையில், சானிடைசர்ஸ்க்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாட்டினை தவிர்க்க மதுபான ஆலைகளை அனைத்தையும் சானிடைசர்ஸ் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சானிடைசர்ஸை மதுபான ஆலைகளே பாட்டில்களுக்கு அடைத்து தயார்ப்படுத்தக்கூடாது என்றும், தயாரிக்கப்பட்ட சானிடைசர்ஸ் அனைத்தும் முறையாக சானிடைசர்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்நிறுவனங்களே அவற்றைப் பாட்டில்களுக்கு அடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

மேலும், மாதுபான ஆலைகளை இவ்வாறு சானிடைசர்ஸ் தயாரிக்க மூன்று அல்லது மேலும் சில நாட்கள் மட்டுமே அறிவுறுத்துமாறும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பின்னர் மதுபான ஆலைகளிடம் சானிடைசர்ஸ் தயாரிக்கும் உரிமத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

அரசு ஊழியர் நீண்டகால பணியிடை நீக்கம் - பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement