கொரோனா கொடூரம்: இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793பேர் உயிரிழந்த சோகம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள முக்கிய நாடான இத்தாலியை மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா. தனது பயணத்தை தொடங்கிய சீனாவை விட அதிக உயிரிழப்புகளை இத்தாலியில் ஏற்படுத்திவிட்டது இந்த வைரஸ். 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி 3 ஆயிரத்து 255 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் 6 கோடி மக்களைக் கொண்ட இத்தாலியில் சனிக்கிழமை வரை 4 ஆயிரத்து 825 பேரின் உயிரை பலிவாங்கியுள்ளது கொரோனா.


Advertisement

image

இத்தாலியில் மார்ச் 21ஆம் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 578. அதிக மக்கள்தொகையை கொண்டிருந்தாலும் அரசு சொல்வதைக் கேட்டதால் கொரோனா பாதிப்பிலிருந்து சீனர்கள் மீண்டுவருவதாக கூறப்படுகிறது. அதை செய்யத் தவறியதால் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர் இத்தாலியர்கள்.


Advertisement

கொரோனா பரவுவதை தடுக்க பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என பொதுமக்கள் கூட வாய்ப்புள்ள அத்தனை இடங்களையும் கடந்த இரண்டு வாரங்களாக மூடி வைத்திருக்கிறது இத்தாலி அரசு. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. அதை பொருட்படுத்தாமல் மக்கள் வெளியில் நடமாடியதே இந்த நிலைக்கு காரணம்.

image

இத்தாலிய மக்களில் கணிசமானோர் முதியவர்கள் என்பது உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதற்கு ஒரு காரணியாக அமைந்துவிட்டது. நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த இத்தாலி அரசு முக்கிய நகரங்களை காவல்துறை கட்டுப்பாட்டில் விட்டுள்ளது. அதிகம் பேர் வசிக்கும் ரோம், மிலன் போன்ற நகரங்களில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ள காவல்துறையினர் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இனியாவது கொரோனா பாதிப்பு குறைந்து இத்தாலியில் இயல்புநிலை திரும்புமா என்பது அந்நாட்டு மக்களின் செயல்பாட்டை பொறுத்தே தெரியவரும்.


Advertisement

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா: 13ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement