JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

அலட்சியமாக வெப்பமானியை வைத்து சோதித்த அதிகாரி பணியிடை நீக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரயில்நிலையத்தில் கவனக்குறைவாக உட்கார்ந்து வெப்பமானியை பயன்படுத்திய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகளின் ஒரு முன்னோட்டமாக ஞாயிறு அன்று சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

image

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 63 பேருக்கும், கேரளாவில் 44 பேருக்கும், தெலங்கானாவில் 19 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் 39 பேருக்கு கொரோனா தொற்றுள்ள நிலையில், இதுவரை 22 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் இவ்வளவு தீவிரமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில்நிலையங்கள், விமானநிலையங்கள், திரையரங்கங்கள், மால்கள் என அனைத்து மூடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றன.

image

இந்நிலையில் அரசு அதிகாரி ஒருவர் இந்த நோயின் தீவிர தன்மையை உணராமல் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. அவர் தனது தொலைப்பேசியில் பேசிக் கொண்டே சுகாதார ஆய்வுப் பயணிகளை மேற்கொள்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

யார் இவர்? எங்கே இது நடந்தது?

கர்நாடகா மாநிலம் தும்கூர் ரயில்நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீடியோவில் உள்ள இவர் செல்போன் பேசியபடி அலட்சியமாக ரயில் பயணிகளின் உடல்வெப்பத்தை பரிசோதனை செய்கிறார். அருகில் வைத்து பார்த்தாலே உடல் வெட்பத்தை கணிப்பது சிரமமாக உள்ள நிலையில் இவர் உட்கார்ந்த இடத்திலே இருந்தே வெப்பத்தை வெப்பமானியை நீட்டி கடமைக்கு அளவிடுகிறார். தீவிர விசாரணைக்குப் பின் இவரது பெயர் நரசிம்ம மூர்த்தி என்று தெரியவந்துள்ளது. வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து நரசிம்ம மூர்த்தியை கர்நாடக மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Advertisement: