JUST IN

Advertisement

கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் விவரத்தை மறைக்கிறதா ஜப்பான்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

கொரோனா பாதிப்பு உள்ளானவர்கள் பற்றிய புள்ளிவிவரத்தை ஜப்பான் மறைக்கிறதா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,587 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 279,320 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 92,906 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா பரவுவதைத் தடுக்க பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருகின்றன.


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக சீனாவில் பரவத் தொடங்கியது. இதற்கு அடுத்ததாக ஜப்பான் நாடு, தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தது. அதன்பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அனைத்தும் கொரோனா குறித்த அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டன. இந்நிலையில் இரண்டாவதாக கொரோனா குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஜப்பானிடம் இருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

image


Advertisement

இதனையடுத்து பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை என்று தகவல் வெளியானது. ஜப்பானுக்கு மட்டுமல்ல, உலகிற்கே இது நல்ல தகவல்தான் எனினும், கொரோனா தொற்றை ஜப்பான் மறைக்கிறதா என்ற சந்தேகம் ஒருபக்கம் எழுந்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை - கமல் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!!

image

ஜப்பான் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டு நடத்துவதற்கானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது ஜப்பான். ஆகவே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகி விடக்கூடாது என்ற நோக்கில் கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை ஜப்பான் மறைக்கிறதா என்ற சந்தேகத்தை சிலர் முன்வைத்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement