இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 271 ஆக அதிரித்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 63 பேருக்கும், கேரளாவில் 44 பேருக்கும், தெலங்கானாவில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் 39 பேருக்கு கொரோனா தொற்றுள்ள நிலையில், 23 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஜப்பானில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு
டிசம்பர் 31ஆம் தேதி கொரோனா தொற்றை சீனா உறுதி செய்த நிலையில், அடுத்த நாடாக வைரஸ் தொற்றை அறிவித்த நாடு ஜப்பான். ஆனால், அதற்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பு பற்றி அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நிலையில், ஜப்பானிடம் இருந்து சத்தமே இல்லை.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை என்றே தகவல் வருகிறது. ஜப்பானுக்கு மட்டுமல்ல, உலகிற்கே இது நல்ல தகவல்தான் என்றாலும், கொரோனா தொற்றை ஜப்பான் மறைக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜப்பானில்தான் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு
பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு ஏற்பாடுகளைச் செய்து வரும் ஜப்பான், ஒலிம்பிக் ரத்தாகி விடக்கூடாது என்ற நோக்கில் கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை மறைக்கிறதோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர்.
Loading More post
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு.. இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?