‘கொரோனா யுத்தத்தில் அடுத்த 3-4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை’: பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த மூன்று-நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Advertisement

கொரோனா வை‌ரஸால் பாதிக்‌கப்பட்டு, கர்நாடகா,‌ டெல்லி, மகாராஷ்டிரா, ‌பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்‌. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட 23 பேர் குணமடைந்து வீடு‌ திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்து பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சோஷியல் டிஸ்டன்சிங் எனப்படும் சமூக விலகியிருத்தலை அனைத்து மக்களும் முறையாக கடைபிடிக்க ஆவன செய்யுமாறு முதலமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

    image

“கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த மூன்று-நான்கு வாரங்கள் மிகவும் முக்கியமானவை. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிக முக்கியமான நடவடிக்கை ‘சமூக விலகல்’ தான். சமூக விலகல் திறம்படச் செயல்படுத்தப்படுவதை மாநில முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement