மும்பை பாடகருடன் அமலா பாலுக்கு திருமணம்?: வைரலான படங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகை அமலா பால், மும்பை இளைஞருடன் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.


Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். 2014 ஆம் ஆண்டு இவர் இயக்குநர் விஜயை திருமணம் செய்து கொண்டார். சில தவறான புரிதலால் இந்த ஜோடி 2017 இல் சட்டப்படி விவாகரத்து பெற்றது. இவரது திருமண முறிவு சம்பந்தமாக சமீபத்தில் அவரது முன்னாள் கணவர் ஏ.எல்,விஜயின் அப்பா ஏ.எல்.அழகப்பன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டி பல்வேறு சலசலப்புகளை ஏற்ப்படுத்தி இருந்தது. அதனையடுத்து அமலா பால், தனது திருமண முறிவுக்கு தனிப்பட்ட யாரும் காரணமல்ல என்று விளக்கம் அளித்திருந்தார்.

image


Advertisement

இந்நிலையில், அமலா பால், மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இவர்கள் இருவரும் காதலர்களைப் போல் மிக நெருக்கமாக உள்ளனர். இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் பவ்னிந்தரின் இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியாகியுள்ளன.

image

வடமாநில பாரம்பரிய திருமண நிகழ்ச்சிக்கான ஆடையில் உள்ளதாகவும், அதனால் இருவருக்கும் இடையே திருமணம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பலரும் கூறியுள்ளனர். இது குறித்து நடிகைக்கு நெருக்கமானவர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தளத்திற்கு பேசியுள்ளனர். அவர்கள் அமலா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர் இன்னும் தனிமையில்தான் இருக்கிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

image

'ஆடை' பட நிகழ்ச்சிகளின் போது, ஒருவருடன் உறவில் உள்ளதை அமலா பால் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement