ரஜினி பங்கேற்ற Into The Wild With BearGrylls நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
காட்டுக்குள் சென்று உயிர் வாழ்வது எப்படி என்பது குறித்த நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றபவர் பியர் கிரில்ஸ். இவரது நிகழ்ச்சியில் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதனையடுத்து ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸ் இணைந்து காட்டுக்குள் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சியை பியர் கிரில்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மலையேறுவது, ஆற்றைக் கடப்பது என பல்வேறு செயல்களை பியர் கிரில்ஸுடன் இணைந்து ரஜினிகாந்த் செய்த இந்த முன்னோட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா பாதிப்பு ?
இந்நிலையில் நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. இந்த ஸ்னீக் பீக் வீடியோவில் பியர் கிரில்ஸ் உடன் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார் ரஜினி.
பியர் கிரில்ஸ் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி ரஜினியிடம் கேட்க, அதற்கு ரஜினி “இங்கு தண்ணீரே ஆளுகிறது என்றும், தண்ணீரே உலகம் என்றும் கூறுகிறார். மேலும் தண்ணீர் பிரச்னையே பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் குறிப்பாக இந்தியாவில் இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது” என்றும் கூறினார். அதன் பின்னர் இருவரும் ஒரு துருபிடித்த பாலத்தை கடக்கின்றனர்.
கொரோனா: விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட கார்த்திக் ஆர்யனுக்கு குவியும் பாராட்டு
அதன் பின்னர் நான் ஒரு நடத்துநராக இருந்தேன் என பியர் கிரில்ஸிடம் ரஜினி கூற அதிர்ச்சி அடைகிறார் பியர். அதன் பின்னர் எப்படி நடிகராக மாறினீர்கள் என பியர் கேட்க தனது சினிமா வாழ்கையை விவரிக்கிறார் ரஜினி. இதனையடுத்து நீங்கள் சினிமா வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் எப்படி சமமாக கையாள்கிறீர்கள் என பியர் கேட்க “நான் நடிகனாக இருக்கும்போது ரஜினியாகவும், அதன் பின்னர் சிவாஜி ராவ்வாகவும் வாழ்கிறேன் என்றும் அவ்வப்போது யாராவது நீங்கள் ரஜினி என்று கூறினால்தான் நான் பிரபலம் என்பது நினைவுக்கு வரும் ”என்று கூறினார்.
அதன் பின்னர் இருவரும் ஒரு மலை மீது ஏறுகின்றனர். மிகவும் கஷ்டப்பட்டு அந்த மலையேற்றத்தை ஏறி முடித்த ரஜினி “இது உண்மையில் சாகசமாக இருந்தது என்றும் தனது வாழ்கையில் இது போன்ற ஒன்றை முன்னர் செய்ததில்லை” என்றும் கூறினார்.
இறுதியில் ரஜினியின் ஷூ லேசரை தனது கையால் சரி செய்து விடும் பியர், ரஜினியிடம் நீங்கள் மிகவும் ஃபிட்டாக இருக்கிறீர்கள்; உங்களது வயது என்ன என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேட்டார். அதற்கு ரஜினி எனக்கு 70 வயது என்று கூறுகிறார். இதைக்கேட்டு வாயை பிளந்த பியர் நீங்கள் உண்மையில் அனைவருக்குமான முன்னுதாரணம் என்று கூறுகிறார். இந்த ஸ்னீக் பிக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியானது மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?