[X] Close >

“ஒருவர்கூட கொரோனாவினால் பாதிக்கவில்லை” - வடகொரியா சொல்வது உண்மையா?

Kim-Jong-Un-orders-new-hospital-built-as-North-Korea-claims-it-has-no-coronavirus


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என வடகொரியா கூறியுள்ளது. வடகொரியா கொரோனாவை வென்றுவிட்டதா அல்லது கொரோனா பாதித்தவர்களை கொன்றுவிட்டதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.


Advertisement

வடகொரியாவில் என்ன நடக்கிறது?

இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால் சீனா, ரஷ்யா, தென்கொரியாவை அடுத்துள்ள நாடு வடகொரியா. இது தென்கொரியாவைவிட அதிக பரப்பளவை கொண்டிருந்தாலும் இங்கு மக்கள் தொகை குறைவே. பொதுவாகவே வெளி உலகுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவரும் வடகொரியாவில், சுற்றுலா பயணிகள், வர்த்தகத்திற்காக அங்கு செல்பவர்கள் அனைவரும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனால் அந்நாட்டிற்கு பயணம் செய்யக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் வெகு சொற்பமே.


Advertisement

image

கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவும், வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும் வடகொரியாவுடன் எல்லையை பகிர்கின்றன. இப்படி இருக்கையில் இங்கு எப்படி வைரஸ் பரவாமல் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை வடகொரியா வெளியிடவில்லை. வெளியுலகுடனான தொடர்பை துண்டித்ததால் தங்கள் நாடு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வடகொரியா கூறுகிறது. அதற்கு காரணம் தங்கள் நாட்டு எல்லைகளை ஜனவரியில் இருந்தே முழுமையாக அடைத்து விட்டதாகவும், அண்டை நாடுகளுடனான ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முற்றிலும் தடை செய்துவிட்டதாகவும் வடகொரியா சொல்கிறது.

மிகவும் கட்டுக்கோப்பான நாட்டின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நாட்டில் ஒரு வைரஸ் தொற்று உள்ளவர்கள் உருவானாலும் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் தொலைத்து விடுவேன் என கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தால் அதிகாரிகளும் சுழன்று சுழன்று வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வடகொரியாவில் கட்டாயம் இந்த வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டிற்கான அமெரிக்காவின் ராணுவ கமாண்டர் ஜெனரல் ராபர்ட் அப்ரம்ஸ் தெரிவிக்கிறார்.


Advertisement

image

சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 180 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகவும் தென்கொரியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வடகொரியாவில் ராணுவ நடவடிக்கைகள் குறைந்து வீரர்களின் நடமாட்டமே இல்லாமல் இருந்தது, ஒரு மாதத்தில் ஒரு விமானம் மட்டுமே பறந்தது என இப்பகுதியை கண்காணிக்கும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

image

இந்த நிலையில் தான் வடகொரிய அதிபர் கிம் , தலைநகரில் நவீன மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறினார். கூடிய விரைவில் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை வடகொரியா மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே இந்த மருத்துவமனை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு கூட தொற்று இல்லை என வடகொரியா கூறுவது உண்மையாக இருப்பின் மகிழ்ச்சியே‌. ஆனால் உண்மையை மறைத்தால் வடகொரியா பெரிய இழப்பை சந்திக்கவே வாய்ப்புள்ளது. ஊட்டச்சத்து குறைவானவர்கள் அதிகம் கொண்ட நாடு அதோடு பொருளாதார தடைகளையும் எதிர்கொண்டிருக்கிறது.

image

சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும், மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன. வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து பேசவில்லை. இதனால் ஊடகங்கள் இல்லாத இரும்புத்திரை நாடான வட கொரியாவின் உண்மை நிலை என்னவென்று இதுவரை உலக மக்களுக்குத் தெரியவில்லை.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close