JUST IN

Advertisement

MA.,Mphil.,B.Ed. படித்துவிட்டு நடிகர் சதீஷ் வீட்டில் வாட்ச் மேன் வேலை - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது வீட்டு வாட்ச் மேன் குறித்து நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.


Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் சதீஷ். இவர் 'எதிர் நீச்சல்', 'தமிழ் படம் 2' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அதிகம் அறியப்பட்டார். அதன்பின் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து 'கத்தி', 'பைரவா' போன்ற படங்களில் நடித்தார். ஆகவே இளம் காமெடி நடிகர்களில் முக்கிய இடத்தை தமிழ் சினிமாவில் இவர் தக்க வைத்தார்.

image


Advertisement

மேலும் சிறுத்தை சிவா இயக்கி வரும் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோவுடன் நடித்துவரும் சதீஷ், நிஜ வாழ்க்கையில் ஒரு ரியல் ஹீரோவை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இது சம்பந்தமாக ஒரு வீடியோ பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சற்றும் எதிர்பாராத ஒரு அற்புதமான மனிதரைப் பற்றிய இரு கதையை இவர் வெளிட்டுள்ளார்

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி2’? - தளபதி 65 அப்டேட்

அந்த வீடியோவில் சதீஷ், “இன்ஸ்பிரேஷன் என்பது வாழ்க்கையில் எங்கிருந்தாவது கிடைக்கும். நான் ஒரு இன்ஸ்பிரேஷன் (Inspiration) மனிதனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இவர் பெயர் பாலுசாமி. இவர் எங்க அபார்ட்மெண்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்து வந்தவர். திடீரென்று ஒருநாள் இந்த வேலையைவிட்டு வேறு வேலைக்குப் போகிறேன் என்றார். நான்கூட வேறு எங்கேயோ வாட்ச் மேன் வேலைக்குப் போவார் என நினைத்தேன்.


Advertisement

image

ஆனால் அவர் ஆசிரியராக வேலைக்குச் சேர இருப்பதாக கூறினார். அவர் தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர இருக்கிறார். அவர் படித்தது MA.,Mphil.,B.Ed. படித்துவிட்டு நடிகர் சதீஷ் வீட்டில் வேலை பார்த்த வாட்ச் மேன் - வைரல் வீடியோ . இவ்வளவு படித்து விட்டு அவர் வாட்ச் மேனாக வேலை பார்த்திருக்கிறார். உண்மையில் பாலு சாமி வாழ்க்கையில் பெரிய இன்ஸ்பிரேஷன் தான் “ எனக் கூறியிருக்கிறார்.

‘வலிமை’ பட பைக் சண்டைக் காட்சிக்காக பயிற்சி எடுக்கும் ஹூமா குரேஷி?

இந்த வீடியோவின் மூலம் ஒரு செய்தியை உணர்த்தியுள்ளார் சதீஷ். நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதர்கள் பின்னால் வியக்கத்தக்க செய்திகள் ஒளிந்துக் கொண்டிருக்கலாம். ஆகவே யாரையும் நாம் சாதாரணமாக பார்க்கக்கூடாது. அதற்கு சரியான உதாரணம் இந்த வாட்ச் மேன் சாரி, வருங்கால தமிழ் ஆசிரியர் பாலுசாமி பெரிய முன்னுதாரணம். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement