வெளிநாடு வாழ் இந்தியர்களில் 276 பேருக்கு கொரோனா தொற்று!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 276 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது
 
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 151 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ‌என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்பு நேரிட்டுள்ளது.
image
 
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 வெளிநாட்டினர் உள்ளிட்ட 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 2 வெளிநாட்டினர் உள்ளிட்ட 27 பேருக்கும், ஹரியானாவில் 14 வெளிநாட்டினர் உள்ளிட்ட 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 276 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர்களில் 255 பேர் ஈரானில் வசிப்பவர்கள். ஐக்கிய அரபு குடியரசில் 12 இந்தியர்களும் இத்தாலியில் 5 இந்தியர்களும் குவைத், ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒரு இந்தியரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஈரானில் அதிகபட்சமாக 255 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
 
image
 
முன்னதாக, ஈரானில் 250க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தப்படவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், டெகரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அங்குள்ள இந்தியர்களின் நிலவரம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். 
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement