தோனி மீண்டும் வந்தாலும் எந்த இடத்தில் இறக்குவீர்கள் ? சேவாக் கேள்வி

தோனி மீண்டும் வந்தாலும் எந்த இடத்தில் இறக்குவீர்கள் ? சேவாக் கேள்வி
தோனி மீண்டும் வந்தாலும் எந்த இடத்தில் இறக்குவீர்கள் ? சேவாக் கேள்வி

ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருக்கும்போது இந்திய அணியில் தோனிக்கு இடம் இருக்கிறதா என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மார்ச் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தாக்கம் தொடர்ந்து இருந்தால் ஐபிஎல் தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் அல்லது இந்தாண்டு ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் விளையாடவுள்ளது ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்திறனை பார்த்துதான் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டிகள் தாமதமாவது தோனியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார் அதில் "இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகவே இருக்கிறது. தோனி அணிக்கு திரும்பினாலும் அவரை எந்த இடத்தில் விளையாட வைப்பார்கள் ? ரிஷப் பன்ட்டும், கே.எல்.ராகுலும் ஏற்கெனவே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். தோனிக்கு மாற்று வீரர்கள் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. எனக்கு தெரிந்து இந்த அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் இப்படியே விளையாட வைப்பதுதான் சரியாக இருக்கும்" என்றார்.

மேலும், தொடர்ந்த சேவாக் "நியூசிலாந்தில் டி20 தொடரை மட்டுமே இந்தியா வென்றது. பின்பு, ஒருநாள், டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. இதற்கு நியூசிலாந்தின் அபாரமான விளையாட்டு திறமையே காரணம். விராட் கோலி தொடரில் சிறப்பாக விளையாடவில்லைதான். கோலி ஒரு கிளாஸ் பேட்ஸ்மேன், இதுபோன்ற நிலை உலகின் அனைத்து முக்கிய ஜாம்பவான்களுக்கும் இருந்துள்ளது. உதாரணத்துக்கு சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வாக், ஜாக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங் ஆகியோரும் ஃபார்மில் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com