சத்தமில்லாமல் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் - தற்காத்துக் கொள்வது எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் சத்தமில்லாமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது வெயில். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் வரும் வாரங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரங்களில் 37டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்கிறது வானிலை மையம்.


Advertisement

image

அடுத்த இரண்டு நாளுக்கு மேகமூட்டமாகவோ, அல்லது வெயிலோ இருக்கும். ஆனால் அடுத்த வாரம் முதல் வெயில் கடுமையாக இருக்குமென்று
தெரிவித்துள்ளது. வரும் மாதங்களில் வழக்கம்போல் வெயில் இருக்குமென்றாலும் கடந்த வருடம் போல் 40டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடுமையான வெயிலுக்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா பரபரப்பு இடையே அதிகரித்து வரும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதும் தேவையான ஒன்று. வரும் கோடையில் இருந்து நம்மை காத்துக்கொள்வதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன?


Advertisement

image

 • கோடை காலத்தில் வெயிலின் வெப்பத்தால் உடலில் தண்ணீரின் அளவு கணிசமாக குறைகிறது. எனவே அதிகளவு நீர் அருந்துவது
  மிகவும் அவசியம்.
 • வெயிலுக்கு உகந்த உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்த வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது நல்லது
 • எலுமிச்சை அல்லது சீரகம் கலந்த தண்ணீரைக் குடிப்பது நல்லது. வெளியில் செல்பவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீரை கொண்டு செல்லலாம்

image

 • வெயிலில் அலைய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் பாதுகாப்பான சன் கிரீம்களை பயன்படுத்தலாம்.
 • அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும்.
 • பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவற்றை அதிகம் பருகலாம். வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம்.
 • நாள் ஒன்றுக்கு 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நல்லது.

image


Advertisement
 • நீண்ட மாதங்களாக பயன்படுத்தமால் இருந்த ஏசி-யை பயன்படுத்த நேர்ந்தால் அதனை தூய்மை செய்து உபயோகிப்பதன் மூலம், சுவாசக் கோளாறுகளை தவிர்க்கலாம்.
 • வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்து
  கொள்ளலாம்.
 • வெயிலில் பயணம் செல்பவர்கள் கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளலாம். அவசியம் இல்லாமல் வெயில் நேரங்களில் வெளியில்
  செல்வதையே தவிர்க்கலாம்

10 ஆண்டுகளில் இல்லாத அளவு முட்டை கொள்முதல் விலை சரிவு..!

loading...

Advertisement

Advertisement

Advertisement