"கொரோனாவிலிருந்து மீள நாங்கள் என்ன செய்தோம்?" - சீனா வானொலி பெண் நேரடி விளக்கம்

china-radio-stations-tamil-section-worked-talked-about-how-china-protect-from-coronavirus


சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் சீனாவிற்கு அடுத்தபடியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிப்பு தொடங்கிய வுஹான் மாகாணம் தற்போது 90 சதவீதம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

image

இப்படி சீன அரசு இவ்வளவு விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஒரே வாரத்தில் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீன அரசு கொரோனா பாதிப்பு குறித்து எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள தமிழ் வானொலி இயக்குநர் இலக்கியா புதிய தலைமுறையிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


Advertisement

அவர் கூறிய தகவல்கள்:

1. சீனாவில் கொரோனா தாக்கம் இருந்த பகுதிகள் உடனடியாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது

2. தொற்று உள்ள நோயாளிகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்


Advertisement

image

3. கொரோனா பாதிப்புள்ள வுஹான் மாகாணத்தில் உடனடியாக சிறப்பு மருத்துவமனையைக் கட்டி, நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது.

4. மருத்துவம் மற்றும் அன்றாட தேவைகளுக்கு தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

5. சீன அரசின் வேண்டுகோளை ஏற்று சீன மக்கள் நன்கு ஒத்துழைப்பு அளித்தனர். நாங்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறோம்

6. பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து சென்றார்கள். அடிக்கடி கைகளை நன்றாகக் கழுவும் முறையைப் பின்பற்றினோம்.

7. மனதில் குழப்பத்தை தவிர்த்தோம். மேலும் வதந்திகளை நாங்கள் நம்பவேயில்லை

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement