நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் தாயார் தாக்கல் செய்த மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோரை வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக அவர்கள் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்ததால், தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போனது. ஆனால் அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நிர்பயா குற்றவாளிகள் தரப்பிலிருந்து சர்வதேச நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் குமாரின் தாயார், தனது மகனின் தூக்கு தண்டனையை தடுக்க வேண்டும் எனக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த ஆணையம், தூக்கு தண்டனையை ரத்து செய்வது தங்கள் அதிகார வரம்பிற்கு வராது என்று தெரிவித்தது. இதுதொடர்பாக ஏற்கனவே பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா நெகட்டிவ்
பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்