சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் தற்போது உலகெங்கும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொருத்தவரை 129 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி 10,12-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் பொது இடங்களில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிக்களுக்கு செல்ல வேண்டாம் என்பன போன்ற பல உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அடிக்கடி கை கழுவ வேண்டும், சானிடைசர் பயன்படுத்துவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது போன்றவை குறித்து வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க தேவாலயத்தில் புனித நீர்: ஒரே பாட்டிலால் 46 பேருக்கு பரவிய கொரோனா
இவ்வாறு பல உத்தரவுகளையும் நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவந்தாலும் அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பது நமக்கு சற்று சிரமமாகவே தோன்றும். ஆனால் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது கை, கால்களை தூய்மையாக கழுவ வேண்டும்
* கூட்டம் கூடும் பொது இடங்களுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்கலாம்.
* பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவோர், அடிக்கடி கை கழுவலாம். அல்லது கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
* தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.
* கண், மூக்கு, வாய் போன்றவற்றில் கைகளை அடிக்கடி வைப்பதை தவிர்க்கலாம்.
* பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசங்களை பயன்படுத்தலாம்.
சித்த மருத்துவம் கொரோனாவை குணப்படுத்துமா? : மருத்துவர் கு.சிவராமனுடன் சிறப்பு பேட்டி
* ஒரு முறை பயன்படுத்திய முகக் கவசத்தை இன்னொருமுறை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
* மற்றவர்கள் பயன்படுத்திய வாட்டர் கேன் உள்ளிட்ட பொருட்களை கையால் தொடுவது அல்லது பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்கலாம்.
* தேவையில்லாமல் பிறரை தொட்டு பேசுவதை தவிர்க்கலாம்.
* பொது இடங்களில் எச்சில் துப்புவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
* உணவகத்தில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே சுத்தமான முறையில் சமைத்து உண்ணலாம்.
* அத்தியாவசிய பொருட்களை முன்னதாகவே வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
* வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் கதவுகள், டிவி ரிமோட், தண்ணீர் குழாய்கள், தண்ணீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்.
* பிறரிடம் நெருக்கமாக நின்று பேசுவதை தவிர்க்கலாம்.
* பொது இடங்களுக்கு செல்லும்போது பிறரிடம் இருந்து சிறிது இடைவெளி விட்டு செல்லலாம்.
Loading More post
”ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை!”-கமல்ஹாசன் குற்றச்சாட்டு
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு
"மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறைத் தண்டனை தர வேண்டும்"-கங்கனா ரனாவத்
தடுப்பூசிக்கும் உணவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை - கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இருமடங்கு அதிகரிப்பு
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்