கொரோனா வைரஸ் பரவும் இடமாக நீதிமன்றங்கள் ஆகிவிடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் அலுவல்கள் தொடங்கியவுடன் கொரோனா குறித்து கருத்து தெரிவித்த அவர், இணையதளம் மூலம் மனுக்களை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
‘கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்’ - பிரதமர் மோடி
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வரும் சூழலில், நீதிமன்றங்களுக்கு மனுதாரர்கள் வருவதை தவிர்க்கும் நோக்கில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்கும் வசதி உச்சநீதிமன்றத்தில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என சந்திரசூட் தெரிவித்தார். இதற்கிடையே, கொரோனா வைரஸை எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் தயார்படுத்திக்கொள்ளவில்லை என நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சம்: ரஜினிகாந்த், அஜித் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்
நீதிமன்ற அறைகள் மற்றும் வாயில்கள் குறுகலாக இருப்பதால் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது சிக்கலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?