மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்களின் சேவையை நாடு என்றும் நினைவில் கொள்ளும் என்றும் மோடி கூறியிருக்கிறார்.
அவசியமற்ற பயணங்களையும் பொது வெளியில் தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். பொறுப்புள்ள குடிமக்கள்தான் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு மிகப்பெரிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110ஐ கடந்துள்ளது. இந்தியாவில் 14 மாநிலங்களில் கொரொனா தொற்று பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 32 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்திரப்பிரதேசத்தில் 17 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹரியானாவில் 14 பேரும் டெல்லியில் 7 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 6 பேருக்கும், ராஜஸ்தானில் நால்வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!