கேரளாவில் கொரோனா தடுப்பு அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு மதுபோதையில் வந்து ரகளை செய்த சுகாதார ஆய்வாளர் 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கேரளாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலால் பொதுமக்களும், அரசு நிர்வாகத்தினரும் அச்சத்தில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு அவசர ஆலோசனைக் கூட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் பறவைக்காய்ச்சல் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சி தலைவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, காரசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் அஜிகுமார் என்பவர் வருகை தந்தார். மது போதையில் வந்த அவரைக் கண்டு மற்ற அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் கூட்டத்தில் தனக்கு சம்பந்தமில்லாத மற்ற துறையின் கேள்விகளுக்கு கிண்டலாக பதிலளித்ததுடன், ரகளையிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதனால் மற்ற அதிகாரிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் மதுபோதையில் இழிவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் முக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அஜிகுமாரை கைது செய்து அழைத்துச்சென்றனர். இதைத்தொடர்ந்து கோழிக்கோடு சுகாதாரத்துறை அஜிகுமாரை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி