ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் கொரோனா..? எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளைத் தவிர்க்கவும், வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் மக்கள் சுய சுத்தத்தை கடைபிடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து மருத்துவர்கள் பங்கேற்ற சிறப்பு வட்டமேசை விவாத நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ஒளிபரப்பப்பட்டது.


Advertisement

இதில் பேசிய சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியன் “ பொது இடங்களில் லிஃப்ட்கள், தொலைபேசிகள், கதவுகள் போன்றவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். குறிப்பாக வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நாம் கதவுகளை திறக்கும்போது, உள்ளங்கை விரல்களை தவிர்த்து, முழங்கைகளை வைத்து திறக்க வேண்டும்” என்று கூறினார்.

கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக முதியவரின் மகளுக்கும் கொரோனா பாதிப்பு

image


Advertisement

 

மேலும் “ தும்மல் வரும்போது கண்டிப்பாக கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். கைக்குட்டையை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் கைவிரல்களை பயன்படுத்தாமல் கை முழங்கைக்கு மேல் உள்ள பாகத்தை வைத்து தும்மினால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்” என்றார்.

image

அதேநேரத்தில் ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உடையவர்கள் காய்ச்சல், சளி போன்றவை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம் என்று நுரையீரல் சிகிச்சை நிபுணர் பிரசன்ன குமார் தாமஸ் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசும்போது “ கொரோனா அறிகுறிகளாக நாம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவறை குறிப்பிடுகிறோம். ஆனால் ஆஸ்துமா போன்ற பாதிப்பு உடையவர்களுக்கு இருமல், சளி என்பவை பொதுவாகவே இருக்கும். எனவே அவர்கள் இருமல் சளி போன்றவை ஏற்படும்போது, இது எப்போதும் வரக்கூடியதுதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என்று பேசினார்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் நாளை திகார் சிறைக்கு வர அழைப்பு

image

மேலும் ரூபாய் நோட்டுகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவக்கூடு‌ம் என்று‌ எச்சரித்த மருத்துவர்க‌ள், ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் கையாண்ட பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement