JUST IN

Advertisement

‘நண்பர் அஜித் போல கோட், சூட் போட்டு வந்திருக்கேன்” - ‘மாஸ்டர்’ விஜய்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜித் போல் நானும் கோட் சூட் போட்டுக் கொண்டு வந்துள்ளேன். நன்றாக இருக்கிறதா என்று ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.


Advertisement

விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதுவும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். 

image


Advertisement

விழாவிற்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபாவை மேடைக்கு அழைத்தனர். அப்போது சந்திரசேகரை சில வார்த்தைகள் பேச சொன்னபோது அவர் ‘என்னால் பேச முடியவில்லை. அதிக மகிழ்ச்சியில் இருக்கும்போது வார்த்தைகள் வராது என்பார்கள். அது இப்போது நடந்துள்ளது’ என்றார். மேலும் அவரது தாய் ஷோபாவை ஒரு பாடல் பாட சொன்னார்கள் அவர் மறுத்துவிட்டார். விஜய், மாஸ்டர் படத்தில் ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல் தனக்குப் பிடித்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்குப் பிறகு நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர், படம் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஷாந்தனு பேசும் போது, “கிட்டத்தட்ட 10 வருஷமா நடித்துக் கொண்டிருக்கிறேன். சில படங்கள் வெற்றியானது. சில படங்கள் தோல்வியை சந்தித்தன. அதை வைத்து பலர் என்ன என்னவோ பேசினார்கள். எனக்கு மட்டும் இல்லை; பலருக்கும் இது நடந்திருக்கும். ஆகவே இதுதான் என் முதல் படம். விஜய் அண்ணாவுடன் ஒரு படம் பண்றேன். என்ன லைஃப் நல்லா வரணும்” என்றார்.

image


Advertisement

அதன்பின் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையேறினார். அவர் பேசும்போது, “கதையை சொல்லவேயில்லை, உடனே வந்து நடிக்கிறேன் என்றார் விஜய்சேதுபதி. கைதி ஷூட்டிங்போது இந்த வாய்ப்பு வந்தது. நான் போய் விஜய்க்கு கதை சொன்னேன். ‘கைதி’ படப்பிடிப்பு முடிவதற்குள் ‘மாஸ்டர்’ ஓகே ஆகிவிட்டது.

இந்தப் படத்திற்கு ‘வாத்தி’ என்றுதான் தலைப்பு வைத்துள்ளதாக நண்பர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அதன் பிறகுதான் ‘மாஸ்டர்’ என்ற உண்மையை வெளிப்படுத்தினேன். இதில் எல்லா பாடல்களும் சூழலுக்கு தேவையான பாடல்களாகதான் இருக்கும். 129 நாள் எந்த இடைவெளியும் இல்லாமல் ஷூட்டிங் செய்வது சும்மா இல்லை. அது என்னுடைய உதவி இயக்குநர்களால் தான் நடந்தது. கதையை மீறி எந்த விஷயமும் போகக்கூடாது என்று யோசித்துதான் போஸ்டரை முடிவு செய்தோம். அதையேதான் போஸ்டராக வெளியிட்டோம்” என்றார்.

image

இறுதியாக ’மாஸ்டர்’ படத்தின் நாயகன் விஜய் பேசினார். அரங்கமே அதிர்ந்தது. விஜய் பேசும்போது, “வாழ்க்கை நதி மாதிரி . நம்மை வணங்குவாங்க, வரவேற்பாங்க. கல் எறிவாங்க. ஆனால் கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக உருவாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடைக்க கூடாது. நம்ம நண்பர் அஜித் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு போகலாம் என்று கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “ஒவ்வொரு தடவையும் ரொம்ப மோசமாக ட்ரஸ் பண்ணிட்டு வரேன்னு காஸ்ட்யூம் டிசைனர் கோட் சூட் கொடுத்தாங்க. நானும் ஓகே இந்த டைம் "நண்பர் அஜித்" மாதிரி ஸ்டைலாக கோட் சூட் போட்டு வரலாம்னு நினைச்சேன். நல்லா இருக்கா?” என்றவர் மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டமாக உருவாக்க வேண்டும் என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement