[X] Close

கொரோனா அச்சத்தால் விடுமுறை - உற்சாகத்தில் ‘ஜெய் கொரோனா’ என கோஷமிட்ட ஐஐடி மாணவர்கள்

Subscribe
IIT-Students-Chant-Jai-Corona-As-College-Shuts-Amid-Coronavirus-Scare

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக டெல்லி ஐஐடி வளாகத்துக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து விடுமுறை அளிக்கப்பட்டதும் டெல்லி ஐஐடி ஹாஸ்டல் மாணவர்கள் "ஜெய் கொரோனா" என கோஷமிட்டனர்.


Advertisement

image

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதில் ஹரியானா மற்றும் டெல்லியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் பள்ளிகளுக்கு ஏற்கெனவே மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


Advertisement

‘ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம்’ - கொரோனாவால் ரசிகர்களுக்கு அமிதாப் அன்பு வேண்டுகோள் 

image

இந்நிலையில், ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டது அதில் "கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மார்ச் 31 ஆம் தேதி வரை ஐஐடி மூடப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஐஐடி வளாகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை எந்தவொரு நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக் கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று ! 

இந்தத் தகவலை அறிந்த ஐஐடி மாணவர்கள் தங்களது ஹாஸ்டல்களில் "ஜெய் கொரோனா" என கோஷமிட்டு நடனமாடினர். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் நடமாடியதாக தெரிகிறது. இப்போது ஐஐடி மாணவர்கள் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close