ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்நாட்டில் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் 183 பேரை கொரோனா பலி வாங்கியுள்ள நிலையில், 5 ஆயிரத்து 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஸ்பெயின் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேலைக்கு செல்வதற்கும் உணவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"ரயிலில் ஏசி பயணிகளுக்கு கம்பளி கிடையாது" தெற்கு ரயில்வே
15 நாள் மருத்துவ அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் பிரதமரின் மனைவி பெகோனா கொமெஸை கொரோனா பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இத்தாலியில் சனிக்கிழமை மட்டும் 3 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லாபம் இல்லை; சேவை...! - கேரளாவில் 2 ரூபாய்க்கு முகக்கவசம் கொடுத்த மருந்துக் கடை
இதனால் அங்கு கொரோனா பாதித்துள்ளவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளில் அவருக்கு கொரோனா தாக்குதல் இல்லை என்பது உறுதியாகியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 700ஐ கடந்துள்ளது. மேலும் இவ்வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக அதிகரித்துள்ளது.
Loading More post
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
மறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி
"கலப்படமில்லாத காங்கிரஸ்காரர்!" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ் புகழஞ்சலி
அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய விசிகவினர் மீது வழக்குப் பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்