ஆட்டோகிராப் போட்டு குட்டீஸ்களை குஷிப்படுத்திய தோனி - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமலே நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டியும் கூட பார்வையாளர்கள் இல்லாமலேதான் நடைபெற்றது. இத்தகைய சூழலில், ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நடக்குமா? அல்லது குறைவான போட்டிகளே நடக்குமா என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இன்னும் உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அப்படி இருந்தும் இன்னும் ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு குறைந்ததாகத் தெரியவில்லை.


Advertisement

image

குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது வழக்கம் போல் அவ்வளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியது முதலே சென்னை ரசிகர்களின் உற்சாகம் பன்மடங்கும் கூடியது. பயிற்சி தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுபோக, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என்பதால், நாள்தோறும் பயிற்சியை காண குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்


Advertisement

image

இத்தகைய சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. மைதான நிர்வாகிகளுடன் தோனி உரையாடுவது, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குட்டி ரசிகர்களுக்கு அவர்கள் அணிந்திருந்த சிஎஸ்கே டி-சர்ட்டின் பின்புறம் தோனி ஆட்டோகிராப் போடுகிறார்.

"திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்" விராட் கோலி ட்வீட்


Advertisement

மேலும், கிரிக்கெட் பேட், அவரது புகைப்படங்கள் போன்றவற்றிலும் தோனி ஆட்டோகிராப் போடுகிறார். ரசிகர்கள் உற்சாகத்துடன் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர். மேலும், இளம் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் தோனி உரையாடுகிறார். அந்த வீடியோவில், ஒருவர் இது உங்களுடைய சொந்த ஊர் ஆகிவிட்டது, உங்களை எப்போதும் வரவேற்கிறோம் என்று கூறுகிறார்.

image

மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேதி ஒத்தி வைக்கப்பட்டாலும் இதுபோன்ற வீடியோக்கள் ரசிகர்களை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement