“கொரோனா பாதிப்பு சரியாக பசு கோமியம் குடியுங்கள்” - இந்து மகாசபை தலைவர் அட்வைஸ்

For-curing-coronavirus--global-leaders-must-drink-cow-urine-said-Hindu-Mahasabha-chief

பசுவின் கோமியத்தை குடித்தால் கொரோனா தாக்காது என அகில இந்திய இந்து மகாசபை தலைவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பு நீங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் மருத்துவமனையில் தொ‌டர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

image


Advertisement

இந்தச் சூழலில் கொரோனா வைரஸால் டெல்லியில் சேர்ந்த ஒருவரும், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தி பரவியதை அடுத்து அது உண்மையில்லை என அறிவியல் ரீதியாக மறுப்பு வெளியானது. மேலும், மத்திய அரசு, கொரோனா வைரஸ் முட்டை, கோழி, ஆட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகள் போன்ற அசைவ உணவு மூலம் பரவுகிறது என்ற தவறான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா அச்சம்: பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு !

இந்நிலையில், அகில பாரத இந்து மகாசபாவின் தலைவர் சுவாமி சக்ரபாணி என்பவர் அசைவ உணவு சாப்பிடுபவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். மேலும், இறைச்சி சாப்பிடுபவர்கள் சார்பாக கொரோனா வைரஸிடம் மன்னிப்பு கேட்கும் அவர், இந்தியர்கள் மீண்டும் ஒருபோதும் இறைச்சி சாப்பிட மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.


Advertisement

image

நேற்று டெல்லியில் இந்து மகாசப அமைப்பு சார்பில் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற்றது. புதியதாக தோன்றியுள்ள கோரோனா வைரஸை எதிர்த்துப் போராட விநோதமான ‘கோ முத்ரா’விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். அதில் கொரோனா பாதிப்பில் இருந்து மீள பலர் வரிசையாக நின்று பசு மாட்டின் சிறுநீரை வாங்கி அருந்தினர். இந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய சுவாமி சக்ரபாணி, கொரோனா வைரஸ் ஒரு "அவதாரம்" என்றார். அசைவ உணவை சாப்பிடுபவர்களை தண்டிக்க வந்துள்ளது என்றும் கூறி அதிர்ச்சையை ஏற்படுத்தினார்.

image

“மிருகங்களைக் கொன்று சாப்பிடும் மக்களால்தான் கொரோனா வைரஸ் வந்துள்ளது. நீங்கள் ஒரு விலங்கைக் கொல்லும்போது, அது ஒரு வகையான சக்தியை உருவாக்குகிறது. அது அந்த இடத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. இது உலகம் முழுவதும் பரவுவதற்கு இதுவே காரணம்”என்றும் அவர் கூறினார்.

"நானும் கொரோனா பரிசோதனை செய்ய இருக்கிறேன்" ட்ரம்ப் தகவல் !

மீன்வள, பால்வள மற்றும் கால்நடை பராமரிப்பு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடந்த மார்ச் 6 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் பேசுகையில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விளக்கியுள்ளத்தை அறிவுறுத்தினார். ஆகவே, வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதற்கு முற்றிலும் மாறாக இந்துமகா சபை தலைவர் கூறியுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement