கொரோனா கண்காணிப்பில் இருந்தவர்கள் 5 பேர் தப்பி ஓட்டம்: தேடிப்பிடித்த போலீசார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 145 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் 5,421பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 624 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 71 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அ‌திகப்பட்சமா‌க கொரோனா வைரஸ் முதலில் பரவிய சீனாவில் 3,177 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் 1,266 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
image
 
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல், மருத்துவ அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பலரும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள பிறகே அவர்கள் வீட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நாக்பூரில் உள்ள மயோ மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 5 பேர் திடீரென்று மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடினர்.
 
image
 
தப்பித்து ஓடிய 5 பேரில் ஒருவருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்ற 4 பேருக்கு பரிசோதனை முழுவதுமாக முடியவில்லை. இதனையடுத்து துரிதமாக நடவடிக்கை எடுத்த போலீசார் மருத்துவமனையில் இருந்த தப்பித்த 5 பேரையும் கண்டுபிடித்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
 
கொரோனா கண்காணிப்பில் இருந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியதாக வெளியான தகவல் நாக்பூரில் பரபரப்பை உண்டாக்கியது
 
loading...

Advertisement

Advertisement

Advertisement