“இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா?” - விஜயின் சம்பள ரெய்டு குறித்து குஷ்பு கேள்வி

Khushbu-reveals-salary-details-of-actor-Vijay-on-Twitter

நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.


Advertisement

‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர். அப்போது அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

image


Advertisement

இதையடுத்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் விசாரணைக்கு ஆஜரானார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இணைத்தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனையடுத்து, நேற்று சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

‘உயிரணு’ தானத்தை பற்றி துணிச்சலாக பேசும் ‘தாராள பிரபு’- திரை விமர்சனம்...!


Advertisement

இந்நிலையில், ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான தகவல் ஐடி விசாரணையின் மூலம் தெரியவந்தது. ‘பிகில்’ படத்திற்கு ரூ.50 கோடியும் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ரூ.80 கோடியும் சம்பளமாக விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை கூறியது.

image

இந்நிலையில் விஜயின் சம்பளம் தொடர்பாகவும் வருமானவரி சோதனை தொடர்பாகவும் நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “விசாரணை முடிந்தது; நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாகப் பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement